நடிகர் பார்த்திபனின் இளைய மகள் அர்ச்சனா 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் அழகிய சுட்டிப் பெண்ணாக நம்மை நெகிழவைத்தவர். தற்போது பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறார். பல பெரிய இயக்குனர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார் பார்த்திபன். பார்த்திபன் மட்டுமில்லாமல் அர்ச்சனாவும் ஒப்புக்கொள்ளவில்லை தற்போது என் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே உள்ளது என்று கூறிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு நடிப்பதை விடவும் படம் இயக்கத்தான் விருப்பம். அதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன். காலம் வரும்போது கண்டிப்பாக தரமான படங்களை இயக்குவேன் என்கிறார்.
பார்த்திபனும் அதற்கு சம்மதித்து பல்வேறு மொழிப்படங்களையும் பார்த்து அதன் நிறை குறைகளை அலசுகின்றனர் அப்பாவும் - மகளும். எது எப்படியிருந்தாலும் படிப்பு முடியும்வரை 'மூச்' என்கின்றனர் இருவரும். நல்லது பார்த்திபன் சார். உங்களைப் போல வித்தியாசமாக சிந்திக்க இன்னொரு இயக்குனர் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு சந்தோஷம்தான்.
ஆனால் ரொம்பபும் வித்தியாசம் காட்டி சில படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்டது போல் இல்லாமல் இருந்தால் சரி. அப்புறம் பையனையாவது நடிக்க அனுப்புவீங்களா... மாட்டிங்களா?