Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடுற குதிரை ஜெய்!

Advertiesment
ஓடுற குதிரை ஜெய்!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (14:18 IST)
webdunia photoWD
ஜெய்க்கு முதல் படம் பகவதி. விஜய்க்கு தம்பியாக நடித்தார். அதன்பின் சென்னை-28 மற்றும் சுப்ரமணியபுரம். அவர் சினிமாவில் நடிப்பதற்காக முதல் ஐடியாவை சொன்னவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவை சந்திக்க ஸ்டுடியோவுக்கு போனபோது அங்கிருந்த ஜெய்யை பார்த்து நீ சினிமாவில் நடியேன், அதற்கான முகம் உன்னிடம் இருக்கிறது என்றிருக்கிறார்.

அந்த விஷயம் அவருக்கும் ஆசையைத் தூண்டிவிட, அதன்பின் நடிக்கத் தொடங்கினார். அப்படி தொடர்ந்த அவரின் படம் இரண்டும் வெற்றி.

தற்போது வார்னர் பிரதர், ஆக்கர் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் 'கோவா', 'அதே இடம் அதே நேரம்', 'அவள் பெயர் தமிழரசி', 'வாமணன்' போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார்.

அப்படி தொடர்ந்து கிடைக்கவும், தனது சம்பளத்தை எண்பது லட்சமாக உயர்த்திவிட்டார் ஜெய். அதையும் கொடுக்கத் தயார் என்று சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அவரிடம் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil