Publish Date: Mon, 15 Sep 2008 (14:11 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (14:10 IST)
திருமணம் செய்து கொண்டால் மனைவியின் அதிர்ஷ்டத்தால் நிறைய படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அருண்குமார் என்ற தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிய கையோடு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, நடிகர் ஸ்ரீகாந்த், சசியின் பூ, ரசிக்கும் சீமானே, மா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது எட்டு வருடமாக காதலித்து வந்த ரேவதியை கரம் பிடித்தார் சிபி. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நம்பாதவர் சத்யராஜ். இருப்பினும் அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்தால் நல்லதுதானே. அப்படி நடந்தும்விட்டது.
இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் படத்தில் நடிக்கிறார். இவருடன் இணைந்து பிரசன்னாவும் நடிக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்களா? என்று கேட்காதீர்கள். பிரசன்னா ஹீரோ, சிபி வில்லன்.
சத்யராஜ் சார் வில்லனாக இருந்து ஹீரோவாக நடித்தார். சிபி ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது வில்லனாக நடிக்கிறார். நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு ஹீரோ என்ன... வில்லன் என்ன எல்லாம் ஒன்றுதானே என்கிறார் சிபி.