'வட்டாரம்' படத்தில் ஆர்யாவுடன் நடித்தவர் கீரத். ஆப்ரிக்காவில் பிறந்து டெல்லியில் செட்டிலானவர். பி.பி.ஏ. படித்துவிட்டு நடிக்க வந்தவர்.
வட்டாரம் படம் மூலம் தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க கனவு கண்டார். அது நடக்காமல் போகவே வேற்று மொழிப் படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.
அதன்படி, தெலுங்கு, கன்னடம் பக்கமும் சென்று ஒரு சில படங்கள் மட்டும் நடித்தார். ஆனாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே மீண்டும் தமிழ் இயக்கனர்களுக்கு தூதுவிட்டார்.
கிளாமராக நடிக்கவும் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட, தற்போது ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் துரை படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். அதுவும் கிளாமராக.
சரி... படங்கள் இல்லாத நாட்களில் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், நான் நன்றாக ஓவியம் வரைவேன். நிறைய படங்கள் வரைந்தும் வைத்திருக்கிறேன் என்று ஆச்சரியப்படுத்துகிறார்.
மேலும், துரை படத்துக்குப் பின்னால் ஒரு ரவுண்ட் வருவேன் என்று சொல்பவர், படத்திலா, காரிலா என்பதுதான் புரியவில்லை.