Publish Date: Mon, 15 Sep 2008 (13:56 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (13:55 IST)
உயிர், மிருகம் ஆகிய படங்களை இயக்கியவர் சாமி. உயிரில் கதைக்காகவும், மிருகத்தில் நடிகை பத்மப்ரியாவை அடித்ததற்காகவும் சர்ச்சைக்குள்ளானவர். அதனால் ஓராண்டு இயக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு, நான்கு மாதத்திலேயே தடை நீங்கியது.
தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் சரித்திரம். இதையடுத்து பரத்தை ஹீரோவாக வைத்து மற்றொரு படத்தை இயக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில்... அவருடைய நண்பர் முத்துராமலிங்கம் என்பவரோடு இணைந்து 'கனவு தொழிற்சாலை' என்ற பட நிறுவனத்தை தொடங்கவுள்ளார். முதல் படத்தயாரிப்பில் 'மிருகம்' ஆதி நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்நிறுவனம் மூலம் பல இயக்குனர்களையும் நடிக, நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்துவதற்குத்தானாம்.
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் இதுபோன்ற நல்ல மனசும் இருக்கிறதே, நல்ல படங்களை இயக்கிய அவரால் நல்ல படங்களையும் தயாரிப்பார் என்று நம்புவோம்.