மன்மதன், திருடா திருடி, மச்சி மற்றும் சொல்லி அடிப்பேன் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் இந்தியன் தியேட்டர்ஸ் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்.
விவேக் ஹீரோவாக நடித்து எஸ்.ஏ.சி. ராம்கி இயக்கிய 'சொல்லி அடிப்பேன்' படம் இன்னும் வெளியிடாத நிலையில், தற்போது சத்தமில்லாமல் சத்ரியன் என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இப்பெயரில் ஏற்கனவே விஜயகாந்த் நடித்து வெளியாகி ஹிட்டானது. கதைக்கு இப்பெயர் மிகவும் பொருத்தமாக இருந்ததால் இந்த தலைப்பையே வைத்துவிட்டேன் என்கிறார் இப்பட இயக்குனர் மணிமாறன்.
இவர் பி. வாசுவிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்தவர், நாயகனாக கம்ப்யூட்டர் இன்ஜினியர் சாய் நடிக்கிறார். காரைக்குடியில் கதை நடப்பதாக இருப்பதால் காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மிகவும் குறுகிய கால தயாரிப்பான சத்ரியன், மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர். இப்படத்தின் இசை ரித்தீஸின் நாயகன் படத்துக்கு இசையமைத்த மரியா மனோகர். நல்ல பாடல்களையும் எதிர்பார்க்கலாம்.