Publish Date: Fri, 12 Sep 2008 (18:13 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (18:13 IST)
இளைஞர்களின் படங்கள் சூப்பர் நடிகர்களின் படங்களை பாக்ஸ் ஆஃபிஸில் முந்துகின்றன.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த கமலின் தசாவதாரமும், ரஜினியின் குசேலனும் ஒன்பதாம், எட்டாம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.
முதலிடத்தில் இருப்பது ஜீவாவின் தாம்தூம். ஜெயம் ரவி, கங்கனா ரனவத், லட்சுமிராய் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், ஆக்சன் காட்சிகளுக்காகவும் இளைஞர்கள் திரையரங்கில் திரள்கிறார்கள்.
இரண்டாமிடம் வெங்கட்பிரபுவின் சரோஜாவுக்கு. மேக்கிங் நன்றாக இருந்தாலும், சென்னை-28ன் மேஜிக் இதில் இல்லை என்பது பரவலான கருத்து.
மூன்றாமிடத்தில் ஜெயம் கொண்டான். தெளிவான திரைக்கதை... செறிவான நடிப்பு... ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறது புதியவர் கண்ணனின் இப்படம்.
புதுமுகம் கிருஷ்ணா நடத்திருக்கும் அலிபாபா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. புத்திசாலித்தனமான திரைக்கதை படத்திற்கு மேலும் ஆடியன்ஸை சேர்க்கும் என்பது பரவலான கணிப்பு.
ஐந்தாமிடத்தை சங்கீதாவின் தனம் கைப்பற்றியுள்ளது.