Publish Date: Fri, 12 Sep 2008 (18:11 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (18:11 IST)
மூன்று மாதத்திற்கு ஒன்று என்பதுதான் கணக்கு. அதனை மாதத்துக்கு ஒன்று என மாற்ற முயற்சிக்கிறார் சஞ்சய்ராம்.
பூவா தலையா, சிவமயம் படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவரும் சஞ்சய்ராம், தனது லிங்கம் தியேட்டர்ஸ் சார்பில் பிற இயக்குனர்களின் படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
முதல்கட்டமாக தனது அசோஸியேட் ரமேஷை இயக்குனராக்கி அழகு பார்க்க திட்டமிட்டுள்ளார். படத்தை லிங்கம் தியேட்டர்ஸ் தயாரிக்கிறது.
சஞ்சய்ராமுக்கு விருப்பமான அருவா வேலு வெட்டு குத்து கதை. பெயர் அக்னி வெயில். அக்னி என்பது வடமொழி என்பதும், அக்னி என்று வைத்தால் வரி சலுகை கிடைக்காது என்பதும் சஞ்சய்ராமின் காதுக்கு சென்றுள்ளதால், படத்தின் பெயர் விரைவில் மாறக்கூடும்.