தனது அப்பா, அம்மாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரேயா, உற்சாகத்தில் இருக்கிறார்.
இது அவருக்கு ஸ்பெஷல் பிறந்தநாள். தமிழில் வெளியான படங்களும் சரி, வெளிவரப் போகும் படங்களும் சரி, முக்கியமானவை. அதைவிட ஸ்பெஷல் கமலின் வாழ்த்து.
கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் ஜக்குபாய் படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதில் சரத்குமார் மகளாக வருகிறார். இதன் படப்பிடிப்பு பாங்காங்கில் நடந்து வருகிறது.
பிறந்த நாளுக்காக பாங்காங்கிலிருந்து வந்தவருக்கு சர்ப்ரைஸ் போன் கால் ஒன்று வந்துள்ளது. பேசியது கமல்ஹாசன். ஸ்ரேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர், மர்மயோகியில் ஸ்ரேயாவுக்கு நடிக்க வாய்ப்பளித்தது மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக அமையும் என்று கூறினாராம்.
இதனை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர், இரவு நண்பர்களுக்கு நட்சத்திர விடுதியில் பார்ட்டி கொடுத்தார். ஸ்ரேயாவின் திரையுலக மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
கந்தசாமி, ஜக்குபாய் படங்களில் நடிக்கும் ஸ்ரேயா, தனுஷுடன் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.