இசை வெளியீட்டு விழாவை கலர்ஃபுல்லாக நடத்த திட்டமிட்டுள்ளது நான் அவன் அது யூனிட்.
ஜி.வி. பிரகாஷ், ஆர்.பி. பட்நாயக், தரண், பிரசன்ன சேகர் ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் நான் அவள் அது படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
வித்தியாசமான இந்த முயற்சியை அறிமுகப்படுத்தப் போவது, படத்தின் நாயகிகளான சதாவும், ஷமிதா ரெட்டியும். இசை வெளியீட்டு விழா என்றால் ராம. நாராயணன் போன்ற அனுபவஸ்தர்களை அழைப்பதுதான் வழக்கம்.
இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இரு தேவதைகளை வைத்து வெளியிடுகிறார்கள். இம்மாம் 16 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கிறது.
மாதவன் நடித்திருக்கும் இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.