Publish Date: Fri, 12 Sep 2008 (14:34 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (14:33 IST)
முன்னணி நடிகைகள் வரிசையில் ஆர்ப்பாட்டம் இன்றி இடம் பிடித்துள்ளார் தமன்னா.
கேடியில் தமன்னா, இலியானா இருவரும் அறிமுகமானார்கள். படம் ப்ளாப். தமிழ் சினிமா இலியானாவை தெலுங்குக்கு துரத்தியது. தமன்னா ஒன்றிரண்டு துக்கடா படங்களில் நடித்தார்.
தெலுங்கு சென்ற இலியானாவின் வளர்ச்சி நம்ப முடியாதது. நாலே படத்தில் த்ரிஷாவின் நெ.1 இடத்தை கைப்பற்றினார். தென்னிந்திய மொழி நடிகைகளில் முதலில் ஒரு கோடி சம்பளம் பெற்றவர் என்ற பெருமையும் இவரை தேடி வந்தது.
தெலுங்கில் முன்னணி நடிகை ஆன பிறகே இலியானாவின் அருமை இங்குள்ளவர்களுக்கு தெரிய வந்தது. கோடியில் சம்பளம் தருகிறோம் என அழைத்துப் பார்த்தார்கள். கேடியில் ஏற்பட்ட காயத்தை மறக்காத இலியானா தொடர்ந்து தமிழ்ப்பட வாய்ப்பை மறுத்து வருகிறார்.
ஆனால், தமன்னா ரூட் வேறு. கல்லூரிக்குப் பிறகு ஆனந்த தாண்டவம், படிக்காதவன், அயன் என்று முன்னேறி வருகிறவர், தெலுங்கில் நடிக்கவும் ஆவலாக உள்ளார்.
மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கால்ஷீட் கொடுக்க தமன்னாவும் தயார்.
மகேஷ் பாபு ஜோடியாக நடித்தே நெ.1 இடத்தை த்ரிஷாவும் பிறகு இலியானாவும் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.