Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாடு பறக்கும் பிரகாஷ் ராஜ்!

Advertiesment
வெளிநாடு பறக்கும் பிரகாஷ் ராஜ்!
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:59 IST)
கேன்ஸ் திரைப்பட விழாவில் மொழி திரையிட்ட போது, இயக்குனர் ராதாமோகனுடன் அந்த திரையிடலில் கலந்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.

அந்த அனுபவத்தை அவர் பரவசமாக விளக்கிய விதம் மெமரி பிளஸ் பயன்படுத்துகிறவர்களுக்கு தெளிவாக நினைவிருக்கும். பிரபல திரைப்பட விழாக்களை தவறவிடக்கூடாது என்று அப்போது கூறியிருந்தார் பிரகாஷ் ராஜ்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இவர் நடித்த காஞ்சீவரம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி, உலகின் பல திரைப்பட விழாக்களில் காஞ்சீவரம் கலந்து கொள்கிறது.

நான்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தாலும், காஞ்சீவரம் திரையிடப்படும் பட விழாக்களில் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறாராம் பிரகாஷ் ராஜ்.

நடித்தோமா... பணத்தை எண்ணிப் பாக்கெட்டில் வைத்தோமா என்றிருப்பவர்கள் மத்தியில் 'செல்லம்' வித்தியாசமானவர்தான்!

Share this Story:

Follow Webdunia tamil