அக்மார்க் ஆக்சன் படத்தில், கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்று பாடலில் பக்தி கமழ செய்தவர் பேரரசு. திருப்பாச்சியில் அம்மனுக்கு அரோகரா போட்டவர் திருவண்ணாமலைக்கு பக்தியில் ஒரு பாடல் எழுதாமல் விடுவார...?
கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலை கிரி வலத்தில் திருவண்ணாமலையின் சிறப்பைச் சொல்லும் பாடலை எடுத்து வருகிறார் பேரரசு. படப்பிடிப்பில் கலந்து கொண்ட அர்ஜுன் சென்னையிலிருந்த மனைவி பிள்ளைகளை திருவண்ணாமலைக்கு வரவழைத்து குடும்பமாக சாமி கும்பிட்டார்.
திருவண்ணாமலையாரின் அருள்... அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்றை லோக்கல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அறிவித்தார் ஆக்சன் கிங்.
அதாவது அரசியலுக்கு அவர் ஒருபோதும் வரமாட்டாராம். மக்களுக்கு செய்யும் சேவையை அரசியலில் ஈடுபடாமலே செய்வாராம்.
திருவண்ணாமலைக்கு ஒரு முறை விஜயகாந்த், சரத்குமார் செல்வது தமிழக மக்களுக்கு நன்மை அளித்தாலும் அளிக்கலாம்!