Publish Date: Wed, 10 Sep 2008 (20:15 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
ராதாமோகனின் அபியும் நானும் படத்தின் பாடல்களை செப்டம்பர் 27ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
அபியும் நானும் அப்பா மகள் பாசத்தை பிரதானமாக கொண்டு உருவாகியிருக்கிறது. பொது வாழ்க்கையில் அப்பா மகள் பிரியத்துக்கு நல்ல உதாரணம் முதல்வர் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும்.
அபியும் நானும் படத்தின் ஆடியோவை முதல்வர் வெளியிட அவரது மகள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்...?
இந்த எண்ணம் தோன்றியதும் முதல்வரை சந்தித்து கூறியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். உடனே முதல்வரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். கனிமொழியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மகள் என்றதும் முதல்வர் 'கனி'ந்து விடுவது இயற்கைதானே!