பார்ப்பனர்களை மோசமாக சித்தரித்ததாகக் கூறி தனம் இயக்குனருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள் சிலர்.
பூவா தலையா படத்தின் தீக்கோழி பாடலையும், அதற்கு ஷெரின் அணிந்திருக்கும் குட்டைப் பாவாடையையும் பார்த்தால் இயக்குனர் சஞ்சய்ராமுக்கும் வரலாம் கொலை மிரட்டல் என்றே தோன்றுகிறது.
பூவா தலையாவில் ஷெரீன் ஆச்சாரமான பார்ப்பன குடும்பத்து பெண்ணாக வருகிறார். இவர் காதலிப்பது கொம்பு தேவனை (கிருஷ்ணகுமார்). இருவருக்கும் ஒரு டூயட் இருக்கிறது. குட்டைப் பாவாடையில் குற்றால சாரலை திரையரங்கிற்குள் கொண்டுவரும் பாடல்.
தீக்கோழி... தீக்கோழி...
தீக்கோழிடா
தீப்பிடிச்ச அந்த இடம்
தித்திக்கும்டா...
கிருஷ்ணகுமாருடன் கிளாமரில் இழைந்து ஆடியிருக்கிறார், ஆச்சாரமான ஷெரீன். இதுவரை சஞ்சய்ராம்... இனி சர்ச்சைராம்?