Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயமானது சன் பிக்சர்ஸ்!

உதயமானது சன் பிக்சர்ஸ்!
, புதன், 10 செப்டம்பர் 2008 (20:11 IST)
இருபத்தியிரண்டு சானல்கள், நாற்பது வானொலி நிலையங்கள்... பிரமாண்டமாக கிளை பரப்பி நிற்கும் சன் நெட்வொர்க்கின் புதிய வரவு, சன் பிக்சர்ஸ். தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதற்கான தயாரிப்பு நிறுவனம்!

இதன் தொடக்க விழாவில் சுந்தர் சி. ஸ்ரீகாந்த், ஜீவா, நகுல், இயக்குனர் ஜீவா, தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் என பலர் கலந்து கொண்டனர்.

காதலில் விழுந்தேன் படத்தின் விநியோக உரிமையை விற்பது குறித்து பேச சன் தொலைக்காட்சிக்கு போயிருக்கிறார் அதன் இயக்குனர் ராஜா. அப்போது எழுந்த பேச்சுவார்த்தையே சன் பிக்சர்ஸ் தொடங்க பிள்ளையார் சுழியாக அமைந்தது என தனது அனுபவத்தை விவரித்தார் ராஜா.

தன்னுடைய படங்கள் ஓடுவதற்கு சன் தொலைக்காட்சியும் ஒரு காரணம் என்றார் சுந்தர் சி. அதனை வழிமொழிந்தார் ஜீவா.

காதலில் விழுந்தேன், தீ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, பூக்கடை ரவி ஆகிய படங்களின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் படங்களை தயாரிக்க இருக்கிறார்களாம். மாதத்திற்கு ஒரு படம் என்பதே இலக்கு என்று அவர்கள் சொன்னபோது கண்ணை கட்டியது நமக்கு.

சின்னத்திரையில் சாதித்தவர்கள் பெரிய திரையிலும் சாதிப்பார்கள்!

Share this Story:

Follow Webdunia tamil