சரித்திர கதைக்கு கவர்ச்சி இளவரசியாக பிடித்துப் போடுகிறார் கமல். த்ரிஷாவை தொடர்ந்து மர்மயோகிக்கு ஸ்ரேயாவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
ராஜ்கமல் இண்டர்நேஷனல்ஸும், பிரமிட் சாய்மீராவும் இணைந்து தயாரிக்கும் மர்மயோகியின் தொடக்க விழா தள்ளிக்கொண்டே போகிறது. படத்தில் நடிப்பவர்களை இன்னும் தேர்வு செய்து முடிக்கவில்லை என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
மர்மயோகியில் த்ரிஷா நடிக்கிறார், மூன்று மாதத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்ற செய்தியை சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவுமில்லை ஏற்கவும் இல்லை.
இந்நிலையில், ஸ்ரேயாவும் மர்மயோகியில் நடிப்பதாக இன்னொரு செய்தி வெளியாகி இளம் ஹீரோக்களின் சிக்ஸ் அப்ஸில் பொறாமை புளியை கரைத்திருக்கிறது. எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
மர்மயோகி இப்போதைக்கு மர்ம-போகி?