Publish Date: Wed, 10 Sep 2008 (20:06 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கும் கார்த்தி அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறார்? நான் இயக்கும் படத்தில் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.
ஹீரோயின் நயன்தாரா. ஒரு கோடி ரூபாய் கொடுத்து அவரது கால்ஷீட் வாங்கிவிட்டோம் என்று லிங்கு தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஆனால், கார்த்தி இதுபற்றி வாய் திறக்கவில்லை. கதை பிடிக்காததால் லிங்குவிடம் கதையை மாற்றச் சொல்லியிருக்கிறார் கார்த்தி. அனேகமாக லிங்கு புராஜெக்டை அவர் கை கழுவலாம் என்கின்றன நெருங்கிய வட்டாரங்கள். அதற்கு ஏற்றார் போலதான் காய் நகர்த்தப்படுகிறது.
பருத்தி வீரனை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் விக்ரமார்குடு படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறது. சுராஜ் இயக்க கார்த்தி நடிக்கிறார். லிங்குசாமி படத்திற்குப் பிறகு கார்த்தி இதில் நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் ஸ்டுடியோ கிரீன் சொல்லும் வேகம் வேறு மாதிரி உள்ளது.
கார்த்தி ஜோடியாக ப்ரியாமணி, அனுஷ்கா ஆகியோரை தேர்வு செய்ததுடன் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆயிரத்தில் ஒருவனை கார்த்தி முடிக்கும்போது, படிக்காதவனை முடித்துவிட்டு சுராஜும் ப்ரியாகி விடுவார். உடனே படத்தை தொடங்க வேண்டியதுதான். அப்படியானால் லிங்குசாமி படம்...?
வேறென்ன... கல்தாதான்!