Publish Date: Tue, 09 Sep 2008 (20:40 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (20:39 IST)
பாங்காங்கில் இருக்கிறார் விஜய். உடன் நயன்தாரா. சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சி முடிந்தபின் இயக்குனர் பிரபுதேவா லொகேஷனை பாங்காங்கிற்கு மாற்றியுள்ளார்.
விஜய் - நயன்தாரா டூயட்டை இங்குள்ள எழில் கொஞ்சம் தீவுகளில் படமாக்குகிறார்கள். அப்படியே ஒரு சண்டைக் காட்சியையும்.
ஆக்சன் காட்சிகளில் அயல்நாட்டு சண்டைக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்பளிப்பது, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பேஷன். ரஜினியின் எந்திரனில் கூட ஒருவர் இருக்கிறார், யென் ஹு பிங்.
வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனராம். ஹாலிவுட் படங்களுடன் மோத இந்த மாற்றம் அவசியமானதுதான்.