Entertainment Film Featuresorarticles 0809 09 1080909068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்திரன் - முதல்கட்ட தகவல்கள்!

Advertiesment
எந்திரன் தகவல் ஐஸ்வர்யா ராய் ரஜினி
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (18:02 IST)
ரஜினி படமா... விளம்பரங்களில் ஹீரோயினை லென்ஸ் வைத்துதான் தேடவேண்டும். வித்தியாசமாக எந்திரன் விளம்பரங்களில் ரஜினிக்கு இணையாக ஐஸ்வர்யா ராய் பெயர். ரஜினியே விரும்பி கொடுத்த கெளரவமாம் இது.

நேற்று தென் அமெரிக்காவில் எந்திரன் படப்பிடிப்பு தொடங்கியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது எந்திரன் கதை.

எந்திரனாகவும் (ரோபோ) சாதாரண மனிதராகவும் ரஜினிக்கு இரு வேடங்கள். ஐஸுக்கு அவர் பெயருக்கேற்ற வேடம், பெயர் நிலா!

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவது இப்போதைய திட்டம். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஐடியா இருக்கிறதாம்.

படப்பிடிப்பு முடியும் வரை ரஜினியின் ரோபோ கெட்டப்பை கசியவிடாமல் பாதுகாக்க டைட் செக்யூரிட்டி செய்திருக்கிறார் ஷங்கர்.

Share this Story:

Follow Webdunia tamil