சிம்பு ரஜினி ரசிகர். ரசிகரா எதிரியா என்பது பல நேரம் புரிவதில்லை. சீண்டுவதானாலும், சீரியஸாக பின்பற்றுவதானாலும் சிம்புவின் ஒன்லி சாய்ஸ் ரஜினி.
என்னை தெரியுமா? பட விழாவில், நண்பனின் பட விழாவுக்கு நான் வந்திருக்கேன், ஆனா ரஜினி வரலை என்று வராத ரஜினியை வார்த்தையில் வாரினார். மறுபுறம் ரஜினி பாடலை ரீ-மிக்ஸ் செய்கிறார்.
சிலம்பாட்டத்தில் ரீ-மிக்ஸ் ஒன்று இடம்பெறுகிறது. ரஜினியின் நல்லவனுக்கு நல்லவனில் வரும் வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள... பாடல். பாடியிருப்பவர் சிம்பு.
குருவும், பகையும் ஒருவர். நல்ல பாலிசியாக இருக்கே!