Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அள்ளிக் கொடுத்த ஜே.கே. ரித்தீஷ்!

Advertiesment
அள்ளிக் கொடுத்த ஜே.கே. ரித்தீஷ்!
இருந்தாக்கா அள்ளிக்கொடு, இல்லாட்டி சொல்லிக்கொடு... நாயகன் படப்பாடல். நாயகன் ஹீரோ ரித்தீஷுக்கு இருக்கிறது. கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுக்கிறார்.

ரித்தீஷின் விளம்பர அலப்பரையை விதவிதமாக பெயிண்ட் அடித்து ஊடகங்கள் கிண்டலித்தாலும், அவர் செய்யும் நல்ல காரியங்கள் பல நேரம் இதயத்தில் ஈரம் கசிய வைப்பவை.

பத்திரிக்கையில் யாரேனும் கஷ்டப்படுவதாக செய்தி வந்தால், இஷ்டப்பட்டு உதவி செய்கிறவர் இவர். அப்படிதான் மாருதி என்ற படத்தை இயக்கிய தியாகராஜனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார் ரித்தீஷ். ஒரு காலத்தில் இயக்குனராக வலம் வந்தவர் இப்போது மனநிலை சரியில்லாமல் ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

இதனை கேள்விப்பட்டதும் தியாகராஜனின் சிகிச்சைக்காக ஐம்பதாயிரம் ரூபாயை அவரது மனைவியிடம் அளித்துள்ளார் ரித்தீஷ். சிகிச்சைக்கு இன்னும் பணம் தேவைப்பட்டால் அதையும் தருவதாக உறுதியளித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil