Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் அறிக்கை!

Advertiesment
ஷங்கர் அறிக்கை!
வதந்தி பரப்பினால்தான் வாய் திறப்பார்கள் போல. ஷங்கரின் ரோபோ பற்றி மாய்ந்து போய் எழுதுகின்றன பத்திரிக்கைகள். அவர் தரப்பிலிருந்து சின்ன செய்தியாவது வரவேண்டுமே. சைலண்டாக தென் அமெரிக்கா கிளம்பிவிட்டது ரோபோ டீம்.

ரோபோ பெயரை எந்திரம், இயந்திரம், எந்திரன்... என்று மாற்றியிருக்கிறார்கள் என ஆளுக்கொரு பெயரை சொன்ன பிறகே, ஷங்கர் தரப்பு மெளனம் கலைத்திருக்கிறது. ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் சாராம்சம்.

படத்தின் பெயர் எந்திரன். துணை தலைப்பு தி ரோபோ. உலகப் புகழ்பெற்ற கவிஞர் பார்லோ நெருதாவின் பெரு நாட்டில் அவருக்கு பிடித்தமான மச்சு பிச்சு மலையில் எந்திரன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்த மேரி இ வாக், மனிஷ் மல்கோத்ராவுடன் கைகோர்க்கிறார். அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ. சண்டைக்கு மேட்ரிக்ஸ் புகழ் யென் ஹபிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளை பங்கு போடுகிறவர்கள் ஐ.எல்.எம்., கே.இ.ஃப்.எக்ஸ்., ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்ட்.

எந்த ஹாலிவுட் படத்தையும் சவாலுக்கு இழுக்கவே இந்த ஹைடெக் தொழில்நுட்பம். எந்திரன்... ஆரம்பமே அமர்க்களம்ணே!

Share this Story:

Follow Webdunia tamil