ஜே.கே. ரித்தீஷின் அடுத்தப் படம் தில்லுமுல்லு என்பது தெரியும். இயக்குனர் யார் என்பது தெரியுமா?
பெயர் ஆதம் பாவா. நாயகன் படத்தில் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தவர். ஆக்சன் விஷயங்களில் ஆதம் பாவா, கிங். எப்படி என்கிறீர்களா?
சில மாதங்கள் முன் இயக்குனர்கள் சங்கத்துக்கு தேர்தல் ஏற்பாடானதே. தேல்தலுக்கு முதல் நாள் பந்தல் அமைத்துக் கொண்டிருந்த இயக்குனர்களை வம்புக்கிழுத்து, கைகலப்பு வரை போனதே ஒரு சம்பவம். அந்த சம்பவத்தின் நாயகன் வேறு யாருமில்லை, இந்த பாவாதான்.
தேர்தல் ரத்தாக காரணமான இந்த சம்பவத்திற்கு ரித்தீஷ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம். அதே பாவாதான் தில்லுமுல்லு படத்தை இயக்குகிறார்.
ஆக்சன் ரியலாக இருக்குமா?