Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரு ஹீரோக்கள்!

Advertiesment
இரு ஹீரோக்கள்!
, சனி, 6 செப்டம்பர் 2008 (19:37 IST)
ஒளிமயமான எதிர்காலம் என்பார்களே... அது தெரியத் தொடங்கியிருக்கிறது தமிழ் திரையுலகில். இந்தியில் ஃப் ஸ்கிரீனில் அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள், ஆன் ஸ்கிரீனில் ஒன்றாக நடிக்க தயங்குவதில்லை.

இங்கு அப்படியே உல்டா. படத்துக்கு வெளியே மாமன், மச்சான். டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க கேட்டால் கர்புர். இந்த நிலையில் ஒளிமயமான மாற்றம்.

போலீஸ் போலீஸ் தெலுங்கு படத்தில் ஸ்ரீகாந்தும், ப்ருத்விராஜும் இணைந்து நடிக்கிறார்கள். மாவிலும் தொடர்கிறது இவர்கள் கூட்டணி. மணிரத்னத்தின உதவியாளர் சுதா இயக்கும் படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடிக்கின்றனர்.

பிரசன்னா, சிபிராஜ் இருவரையும் வைத்து கவசம் படத்தை இயக்குகிறார் ஷக்தி. சிபி, விக்ராந்த் நடிப்பில் நின்றுபோன பட்டாசும், மீண்டும் தூசு தட்டப்படுகிறது.

ஒரே நேரத்தில் இத்தளை டபுள் ஹீரோ சப்ஜெக்டை தமிழ் திரையுலகம் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்த மாற்றம் சிம்பு-தனுஷ், சூர்யா-விக்ரம், அஜித்-விஜய், கமல்-ரஜினி என்று பரிமாணம் கொண்டால்... கற்பனையே கற்கண்டாக இனிக்கிறதே!

Share this Story:

Follow Webdunia tamil