சிம்பு நடிப்பில் சிலம்பாட்டம் படத்தை தயாரித்து வரும் லஷ்மி மூவி மேக்கர்ஸ் அடுத்து ஷக்தி நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.
சிம்பு, சினேகா, ஷனாகான் நடிப்பில் எஸ். சரவணன் இயக்கிவரும் சிலம்பாட்டம். அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பிராமண இளைஞனாகவும், பிளாஷ்பேக்கில் அதற்கு எதிர் மாறான தோற்றத்துடன் இருவேறு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு. யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக வருகிறது.
சிலம்பாட்டத்துக்குப் பிறகு பி. வாசுவின் மகனும், தொட்டால் பூ மலரும் ஹீரோவுமான ஷக்தி நடிக்கும் படத்தை லஷ்மி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கிறது. இவருக்கு ஜோடி ரம்யா நம்பீஸன். படத்துக்கு ஆட்டநாயகன் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதே பெயரை வேறொருவர் சேம்பரில் பதிவு செய்துள்ளதாகவும், அதனால் ஆட்டநாயகன் பெயர் மாற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. அதனை ஆட்டநாயகன் யூனிட் மறுத்துள்ளது.
ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துவரும் ஷக்தி. இதில் முதல் முறையாக ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணாராம் படத்தை இயக்குகிறார். நாசர், சந்தானம், ஜீவா, ஆர். சுந்தர்ராஜன், சச்சு ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார், ஒளிப்பதிவு விஜய் மில்டன். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதுகிறார். இன்னு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகியது.