Entertainment Film Featuresorarticles 0809 05 1080905088_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவண்ணாமலையில் பூஜா காந்தி!

Advertiesment
திருவண்ணாமலை பூஜா காந்தி பேரரசு
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (19:50 IST)
பேரரசு‌வின் பழனியில் பரத் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. விஜய், அஜித்தை வைத்து இயக்கியவர். த்ரிஷா, அசின், நயன்தாரா போன்றவர்களை ஆட்டுவித்தவர்.

துரதிர்ஷ்டம் என்னவென்றால், யாரும் பேரரசு படத்தில் நடிக்க தயாரில்லை. கடைசியில் காஜல் அகர்வாலின் கால்ஷீட்டே கிடைத்தது.

அன்று ஒரு சபதம் செய்தார் பேரரசு. முன்னணி நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைப்பதில்லை!

இந்த சைலண்ட் சபதத்தின்படி திருவண்ணாமலையில் அர்ஜுன் ஜோடியாக தன்யா வகில் என்பவரை ஒப்பந்தம் செய்தார். வகில் விவகாரமான ஆள். பிளைட் டிக்கெட், நட்சத்திர ஹோட்டல், ஹைஜீனிக் உணவு என்று அவர் செய்த அலப்பறையில் பேரரசே அரண்டுவிட்டார்.

இப்படியே போனால் திருவண்ணாமலை கிரிவலத்தை தன்யா வகிலை சுற்றியே நடத்த வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொண்டவர், வகிலுக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து கொடுத்துவிட்டு பூஜா காந்தியை ஒப்பந்தம் செய்துள்ளார்.

காந்தி என்றதும் யாரோ என நினைக்க வேண்டாம். கொக்கி சஞ்சனாதான் இந்த பூஜா காந்தி. இது இவரது நிஜப் பெயராம்.

Share this Story:

Follow Webdunia tamil