நடிகை குளித்த குளம் நாட்டுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இந்த நல்ல விஷயம் நடந்திருப்பது சரித்திரம் படப்பிடிப்பில்.
ராஜ்கிரண், ஆதி நடிக்கும் சரித்திரத்தில் ஆதி ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவிகா. பொள்ளாச்சியில் ஸ்ரீதேவிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்றை எடுத்தார் சாமி.
இதற்காக குளம் ஒன்றை செயற்கையாக உருவாக்கி அதில் ஸ்ரீதேவிகாவை நீந்த விட்டனர். படப்பிடிப்பு முடிந்த பிறகு, நீர்ப்பிடிப்புள்ள குளத்தை மூட யாருக்கும் விருப்பம் இல்லை.
அதனால் வெட்டிய குளத்தை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தானமாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.
குளத்தில் தொடங்கிய தானம் வீடு, பள்ளிக்கூடம் என்று விரிவானால் மக்களுக்கும் நல்லது, சரித்திரத்திலும் இடம் பிடிக்கலாம்.