தமிழில் தயாராகும் பாதிப் படங்கள் இந்திப் படங்களின் ரீ-மேக். என்னென்ன படங்கள் என்று சின்னதாக பட்டியல் போட்டாலே கோடம்பாக்கம் பாலம் அளவுக்கு வருகிறது.
மெய்ன் ஹுனா ரீ-மேக்கில் அஜித், சோல்ப்ஜ்யரில் விஜய், எஸ் பாஸில் மாதவன், டாக்ஸி நெ.9211-ல் பசுபதி, ஜப் வி மெட்-ல் பரத்...
இத்துடன் நமஸ்தே லண்டன் படமும் இணைகிறது. இந்தியில் சூப்பர் ஹிட்டான இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ஜி.வி. பிலிம்ஸ் வாங்கியுள்ளது. மாதவன் தமிழ் ரீ-மேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்து.
மாதவன் தற்போது எஸ் பாஸின் ரீ-மேக் குரு என் ஆளு படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு ரீ-மேக்கில் நடிக்க அவர் ஒத்துக்கொள்வாரா? பதிலுக்கு காத்திருக்கிறது ஜி.வி. பிலிம்ஸ்.