ஏ. வெங்கடேஷை செல்லமாக பிஸி வெங்கடேஷ் என்றே அழைக்கிறார்கள். ஏன்? சொன்னால் உங்களுக்கே தலை சுற்றும்.
துரை படத்தை அர்ஜுனை வைத்து இயக்கிவரும் ஏ. வெங்கடேஷ், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடியும் முன் சுந்தர் சி-யை வைத்து வாடா படத்தை தொடங்கினார். தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
வாடா தொடங்கி வாரம் ஒன்று ஆகும் முன், சரத்குமார் நடிப்பில் இமயமலை படத்தின் கதை விவாதத்தையும் ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கிறார். அது எப்படி சார் என்று ஆச்சரியப்படுகிறவர்களுக்கு இன்னொரு செய்தி.
அருண் விஜய் நடிப்பில் மலை மலை என்றொரு படத்தையும் இம்மாத இறுதியில் தொடங்க உத்தேசித்துள்ளார் வெங்கடேஷ்! இந்த அசுர உழைப்புக்கு துணையாக இருப்பவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
வெங்கடேஷின் படங்களுக்கு வசனம் எழுதும் இவர் வெங்கடேஷ் சொல்லும் ஒரு வரி கதைகளுக்கு பக்காவாக வடிவம் கொடுக்கிறார்.
ஆனாலும், இந்த வேகம் கொஞ்சம் அதிகம். பார்த்து ஸார்.... மோதிக்கப் போறீங்க.