ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தேனப்பன் தயாரித்திருக்கும் 'துரை'யின் ஆடியோ செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அர்ஜுன், கீரத், கஜாலா, விவேக், சுமா நடித்திருக்கும் துரையை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் அர்ஜுன். டி. இமான் இசையமைத்துள்ளார்.
சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் துரையின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.