Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலிவுட்டில் நமிதா!

மாலிவுட்டில் நமிதா!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (19:58 IST)
பிரமிளா, ஷகிலா உள்பட ஏராளமான காலைக்காட்சி கவர்ச்சி வெடிகுண்டுகளை உருவாக்கிய தேசம் கேரளா. எளிதில் அதிர்ச்சி அடையாத மலையாளிகளே திணறிப் போயுள்ளனர். நம்மூர் நமிதாவின் மாலிவுட் பிரவேசமே இதற்கு காரணம்.

தெலுங்கில் கோடியில் சம்பளம் வாங்கும் நயன்தாராவாக இருக்கட்டும், இல்லை இந்தியின் அமீர் கானுடன் நடிக்கும் அசினாக இருக்கட்டும், மலையாள படமொன்றில் நடித்தால், எண்ணி பதினைந்து லட்சம் கொடுப்பார்கள். அதிகம் கெடுபிடி செய்தால் இருபது. கடவுளின் தேசத்தில் காசு கம்மி என்பதால்தான் நாம் மேலே சொன்ன இரு நடிகைகளும் மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் தருவதில்லை.

இந்நிலையில் மலையாள படமொன்றில் நடிக்கச் சென்றார் நமிதா. தமிழ்ப் படங்கள் உபயத்தில் அம்மணி அங்கு ஏற்கனவே பாப்புலர். அவரின் கவர்ச்சி கண்டு தயாரிப்பாளரின் பர்ஸ் தானாகவே இளகிவிட்டதாம். ஆம், நண்பர்களே... நமிதாவுக்கு கொடுக்கப்பட்டது பதினைந்தோ, இருபதோ அல்ல இருபத்தைந்து லட்சம்!

இதை கேள்விப்பட்டதிலிருந்து மாலிவுட்டி‌ல் பொறாமை புகைச்சலாம். கலை வளர்க்கப் போன நமிதா பகை வளர்த்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil