ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை, ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தால் மட்டுமே அபிநயம் பிடிப்பேன்!- மேக்னா நாயுடுவின் புதிய தொழில் கொள்கை இது.
இந்தக் கொள்கைக்கேற்ப அமைந்த படம் பந்தயம். இதில் ஒரு பாடலுக்கு ஆடுவதாகத்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஓரிரு காட்சிகளிலும் நடித்திருக்கிறேன் என்கிறார் மேக்னா.
சுந்தர் சி. நடிக்கும் வாடா-வில் ஷெரில் பிரிண்டோவுடன் இன்னொரு நாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் இவர். ஏ.வெங்கடேஷ் படத்தின் இயக்குநர்.
தொடர்ந்து இரு படங்கள் கிடைத்ததால், தொழில் கொள்கையை நிரந்தரமாக்கத் தீர்மானித்துள்ளார் மேக்னா.