Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுமகேந்திரா - ஒரு கல்லில் மூன்று மாங்காய்!

பாலுமகேந்திரா - ஒரு கல்லில் மூன்று மாங்காய்!
, சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:10 IST)
விரைவில் தனது அனல் காற்று படத்தை தொடங்குகிறார் பாலுமகேந்திரா. படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்டது பாலுமகேந்திராவின் ஒரேயொரு அசிஸ்டெண்ட் மட்டுமே!

காமிரா கவிஞருக்கு ஏனிந்த சிக்கணம்?

சினிமா பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் முடிவில் பாலுமகேந்திரா இருப்பது ரசிகர்களுக்கு தெரியும். சில காரணங்களால் அது தள்ளிப் போகிறது. பாலுமகேந்திராவிடம் கேமரா தொழில்நுட்பம் கற்க லட்சங்களுடன் க்யூவில் நிற்கிறார்கள் பலர்.

அனல் காற்று படத்தில் இவர்களில் சிலரை உதவி இயக்குனர்களாகவும், உதவி கேமராமேன்களாகவும் சேர்த்துக் கொள்ளப் போகிறாராம்.

மாணவர்களுக்கு பிராக்டிகலாக வகுப்பு நடத்தியது போலவும் இருக்கும், சினிமா கனவும் நிறைவேறும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பீஸ் என்ற பெயரில் பணம் கிடைப்பது, மூன்றாவது மாங்காய்!

Share this Story:

Follow Webdunia tamil