நேற்று தாம்தூம் ரிலீஸ். ஜீவா இயக்கிய கடைசிப் படம். அவரின் முதல் ஆக்சன் படமும் இதுவே.
ஜெயம் ரவி, கங்கனா ரனவத், லட்சுமிராய் நடித்த இப்படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு. தொண்ணூறு சதவீத திரையரங்குகள் ஹவுஸ்·புல். மலேசியாவிலும் இப்படம் வெளியாகியுள்ளது. மலேசிய சென்சாரில் சின்ன 'கட்' கூட இப்படத்திற்கு இல்லை. இது ரொம்ப அபூர்வம்.
தாம்தூமின் ப்ரிமியர் ஷோ சென்னை சத்யம் சினிமாவில் நடந்தது. விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் படத்தை ரசித்துபூ பார்த்தார். ஜெயம் ரவி, சிம்பு, ஜி.வி. பிரசாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரும் படத்தை ரசித்தனர்.