அறிவித்தபடி பி. வாசு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள்.
குலேசனில் தங்களை அவமதிப்பது போல் வாசு காட்சிகள் வைத்துள்ளார், அதனை உடனே நீக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தினர். முடிதிருத்தும் தொழிலாளர்கள்.
வடிவேலுவை பி. வாசு சித்தரித்த விதம்தான் அவர்களுக்குப் பிரச்சனை. இதுகுறித்து விளக்கமளித்த பி. வாசு, போலி சாமியார், போலி டாக்டர் போலதான் வடிவேலு கேரக்டரை அமைத்தேன். முடிதிருத்தும் தொழிலாளர்களை உயர்வாகவே காட்டியிருக்கிறேன். அவர்களை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றார்.
விளக்கத்தை முடிதிருத்துவோர் சங்கம் ஏற்கவில்லை என்றாலும், போராட்டம் தொடராதது ஆறுதல்.