Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரமணாவின் மகிழ்ச்சி!

Advertiesment
ரமணாவின் மகிழ்ச்சி!
, சனி, 30 ஆகஸ்ட் 2008 (18:54 IST)
இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன் என்றார் ரமணா. நாயகன் படம் பத்து நாட்களை தாண்டும் என்ற நம்பிக்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரமணா கூறிய வார்த்தைகள் இவை.

மீசை மாதவனில் அறிமுகமான ரமணாவை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்க ஓரு படம் கூட இல்லை. நடித்த படங்கள் எல்லாம் தியேட்டரை கண்டு தெறித்து ஓடினால், எப்படி நினைவில் நிற்கும்?

ஸ்டார் கிரிக்கெட்டில் சென்சுரி அடித்தபோது மட்டும், பார்ரா அது ரமணா என்று திரும்பிப் பார்த்தனர். அதுவும் பழங்கதையான நிலைநில் வெளிவந்தது நாயகன். ரித்தீஷுடன் ரமணாவுக்கும் இதில் நல்ல பெயர்.

சினிமாவில் முகவரி கிடைத்த மகிழ்ச்சியில் தனது உழைப்பை பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எடுத்துவிட்டார் ரமணா. விரைவில் இவர் நடித்த அஜந்தா வெளியாகிறது.

எல்லாம் சரி... உங்களை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம் நாற்பது லட்சம் சம்பளம் கேட்டு 'ஷாக்' கொடுக்கிறீர்களாமே... உண்மையா ஸாப்?

Share this Story:

Follow Webdunia tamil