Publish Date: Sat, 30 Aug 2008 (18:53 IST)
Updated Date: Sat, 30 Aug 2008 (18:52 IST)
1977, ஜக்குபாய் படங்களில் நடித்துவரும் சரத்குமார் அடுத்து ஓம் பிரகாஷ் இயக்கத்தில் நடிக்கிறாராம்.
தீவிரவாதிகளை அதிகாரி ஒருவர் வேட்டையாடும் கதை. படப்பிடிப்பை ஆப்கானிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஷங்கர் கவுடே படத்தை தயாரிக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் இதற்கு முன் எடுக்கப்பட்ட இந்தியப் படம், காபுல் எக்ஸ்பிரஸ். ஜான் ஆபிரஹாம் நடித்தது. அதே போன்ற படம்தான் இதுவும் என்கிறது ஸ்டுடியோ வட்டாரம்.
தீவிரவாதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக இதில் நடிக்கிறார் சரத். இவரது படமொன்று ஆப்கானிஸ்தானத்தில் படமாக இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் படம் குறித்து தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.