நட்பை மதித்து விஜயகாந்த் நடித்துக் கொடுக்கும் படம் எங்கள் ஆசான். விஜயகாந்தின் கவுரவ வேடம் கதை முழுவதும் வருவதாக மாறியிருக்கிறது. காரணம் கேப்டனின் ஈடுபாடு.
வங்கி அதிகாரியாக மக்கள் பணத்தை சுருட்டும் வில்லன்கள் அடையாளம் காட்டுகிறார் விஜயகாந்த். பஞ்சாயத்து தலைவியாக வரும் ஷெரில் பிரிண்டே கேப்டனின் ஜோடி.
இரண்டாவது கதாநாயகிகள் விக்ராந்த். ஸ்டாம்ப் சைசுக்கு அவரை விளம்பரத்தில் காட்டுகிறார்கள்.
கருப்பு எம்.ஜி.ஆர். பெயரை எம்.ஜி.ஆரிடமிருந்து கடன் வாங்கியவர், ஆயிரத்தில் ஒருவனில் வரும் மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கம் வீழ்த்தி விடும் வசனத்தையும் இரவல் வெற்றிருக்கிறார்.
வங்கி பணத்தை சுருட்டும் வில்லனாக புதுமுகம் ராம்கி நடிக்கிறார். இவர் விஜயகாந்தின் தே.மு.தி.க.வின் வர்த்தக பிரிவு நிர்வாகியாம்.
அப்போ... எங்கள் ஆசான் அரசியல் படம்னு சொல்லுங்க!