படப்பிடிப்பு நடக்கும் பக்கம் எட்டிப் பார்க்காதவர் இளையராஜா. இசையே அவர் உலகம், இசையே அவர் மூச்சு.
ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு லொக்கேஷன் பக்கம் திரும்பாதவர், ஜகன் மோகினி படப்பிடிப்புக்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடக்கும் விதத்தை பார்த்து ரசித்தார் இளையராஜா.
இந்த அபூர்வ பரவசம் சரித்திரம் யூனிட்டுக்கும் கிடைத்துள்ளது. புரவிப்பாளையத்தில் உள்ள மகானின் சமாதிக்கு வந்த இளையராஜா அப்படியே பொள்ளாச்சியில் நடந்த சரித்திரம் படப்பிடிப்புக்கும் சென்றார். அவரை எதிர்பார்க்காத ஹீரோ ராஜ்கிரணும், இயக்குனர் சாமியும் சந்தோஷ பரவசத்துடன் வரவேற்றார். சிறிது நேரம் அளவளாவி விட்டு கிளம்பினார் இளையராஜா.
இசைஞானியின் திடீர் வரவால் மழைகண்ட பூமியாக ஈரமாகி போனது யூனிட்டில் உள்ளவர்களின் இதயம். வந்தது இசை மழையல்லவா.