ஷோலோ ஹீரோயினாக நடிக்கும்போதே துணிச்சலாக ஒரு முடிவெடுத்துள்ளார் கீர்த்தி சாவ்லா. கெஸ்ட் ரோலில் நடிப்பது!
உளியின் ஓசை, நாயகன் என கீர்த்தி சாவ்லா ஹீரோயினாக நடித்த படங்கள் வரிசையாக வெளியாகின்றன. நடுவில் லிங்குசாமியின் அசோசியேட் கதையொன்றைக் கூறியிருக்கிறார். அதில் குட்டியாக ஒரு கேரக்டர் கெட்டியாகப் பிடித்து விட்டது சாவ்லாவிற்கு. வெளியே விளம்பரப்படுத்தாமல் சத்தமில்லாமல் அந்தக் குட்டிக் கேரக்டரில் நடித்துக் கொடுத்துள்ளார். ஷக்தி, சந்தியா நடித்திருக்கும் மகேஷ், சரண்யா மற்றும் சிலர் படத்தில் இந்த ரோல் இடம்பெறுகிறது.
தொடர்ந்து கெஸ்ட் ரோலில் நடிப்பாரா?
சான்ஸே இல்லை! அது நட்புக்காக நடித்தது என்று பிளேட்டைத் திருப்பிப் போடுகிறார் சாவ்லா.