Publish Date: Fri, 29 Aug 2008 (17:20 IST)
Updated Date: Fri, 29 Aug 2008 (17:20 IST)
ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் தனது பிரமாண்ட காலடியை தமிழ் சினிமா தயாரிப்பில் எடுத்து வைக்கிறது. இதன் முதல் தயாரிப்பு, சூர்யா நடிக்கும் சிங்கம்!
பருத்தி வீரன், ஜில்லுனு ஒரு காதல் படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் அடுத்து சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் சிங்கம் படத்தை தயாரிக்கிறார். கே.வி.ஆனந்தின் அயன் முடிந்த பிறகு சிங்கம் சீறிப் பாய்கிறது.
இதனை ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன், ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது. பிப்ரவரியில் இதே கூட்டணி தயாரிக்கும் படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகன். இயக்கம் சுராஜ்.
பிக் பிக்சர்ஸின் இவ்விரு படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகின்றன. சிங்கத்துக்கேற்ற புள்ளிமானை படத்துக்காக தேடி வருகிறார் ஹரி. மான் அகப்பட்டதும் படப்பிடிப்புக்கு கிளம்பலாம் என காத்திருக்கிறார்கள்.