ஆடியில் அம்மன், ஆடி கழிந்தால் ஐயப்பன். முன்பு சீஸனுக்கு ஏற்றபடி அரைடஜன் அம்மன் மற்றும் ஐயப்பன் படங்கள் வெளியாகும். இன்று அந்த சீஸன் வியாபாரம் குறைவு என்றாலும் ஒரேயடியாக வற்றி விடவில்லை அந்த வழக்கம்.
மாலை போடும் ஐயப்ப பக்தர்களை குறி வைத்து தயாராகிறது, சபரிமலை ஸ்ரீ ஐயப்பா. ஐயப்பனின் மகிமைகளை சொல்லும் இப்படத்தில் ஐயப்பனாக நடிப்பவர் கெளசிக் பாபு. இவர் ஏற்கனவே ஐயப்பனை பற்றி தொலைக்காட்சி தொடரில் ஐயப்பனாக நடித்து பிரபலமானவர்.
ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் சசிமோகன், மூன்று மொழிகளில் படம் தயாராவதாக குறிப்பிட்டார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு.
கெஸ்ட் ரோலில் பிரபு, மம்தா மோகன் தாஸ் நடிக்கின்றனர்.