Publish Date: Fri, 29 Aug 2008 (17:17 IST)
Updated Date: Fri, 29 Aug 2008 (17:17 IST)
சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது சத்யம். இரண்டாமிடம் குலேசனுக்கு. தசாவதாரத்தை நான்காவது இடத்திற்கு பின் தள்ளி மூன்றாமிடத்தை பிடித்துள்ளது ஜே.கே.ரித்தீஷின் நாயகன்.
சென்ற வார இறுதி வசூலில் 24 லட்சங்கள் வசூலித்து தொடர்ந்து சத்யம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் மொத்த வசூல் 1.06 கோடி!
குசேலனின் வார இறுதி வசூல் ஏறக்குறையை இருபதரை லட்சங்கள். இதுவரையான மொத்த வசூல் 3.62 கோடி. ரஜினி படங்களில் இது மிகமிக குறைவான வசூல்.
நாயகன் எட்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாயுடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. இது படத்தின் மூன்று நாள் வசூல் என்பது ஆச்சரியம்.
சென்னையில் மொத்த வசூல் 10.68 கோடியுடன் நான்காமிடத்தில் உள்ளது தசாவதாரம்.