Publish Date: Thu, 28 Aug 2008 (17:53 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (17:53 IST)
விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் உயர்த்திய போர் கொடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ். கணிசமான நஷ்டஈடு வழங்க முன் வந்திருக்கிறார்கள் குலேசன் தயாரிப்பாளர்களும், ரஜினியும்.
குலேசனை முன்னுதாரணமாகக் கொண்டு சத்யம் விநியோகஸ்தர்களும் கொடி பிடிக்க தீர்மானித்துள்ளார்கள். ஏ, பி என்றில்லாமல் வெளியிட்ட எல்லா சென்டர்களில் அடி வாங்கியிருக்கிறது சத்யம். ஜெயம் கொண்டானும், தாம் தூமும் வெளியாவதால், சத்யத்துக்கு வரும் ஒன்றிரண்டு பார்வையாளர்களும் அந்தப் படங்களுக்கு பறந்து விடுவார்கள்.
துல்லியமாக கணக்கு போட்டு நஷ்டஈடு கேட்க இருக்கிறார்கள் நஷ்டமான விநியோகஸ்தர்கள்.