சினேகா, பிரசன்னா நடித்த அச்சமுண்டு முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன.
முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் அருணகிரி நாதன் உயர் தொழில் நுட்பத்தில் படமாக்கியுள்ளார். ஹாலிவுட்டின் நவீன ரெட் ஐ கேமரா இப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மர்மயோகியில் கமலும் இந்த கேமராவை பயன்படுத்த உள்ளார்.
த்ரில்லர் படமான இதனை உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் முனைப்பில் இருக்கிறார் அருணகிரி நாதன். உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பிறகே உள்ளூரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
உலக அங்கீகாரத்துக்குப் பிறகு உள்ளூர் அங்கீகாரம். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.