Publish Date: Thu, 28 Aug 2008 (17:52 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (17:51 IST)
திரைப்பட மேதை இங்க்மர் பெர்க்மனின் அழியா காவியங்களைப் பார்க்க அரிய வாய்ப்பு. சென்னையில் இன்று பெர்க்மன் திரைப்பட விழா தொடங்குகிறது.
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு பெர்க்மனின் ஏழு திரைப்படங்ககள் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்படங்களைப் பார்க்க கட்டணம் ஏதுமில்லை. எந்த திரைப்பட சங்கத்திலும் நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை.
இன்று இரவு ஒன்பது முப்பது மணிக்கு பெர்க்மனின் புகழ்பெற்ற தி டெவில்ஸ் ஐ திரைப்படம் திரையிடப்படுகிறது.
அரிய படம்... அரிய வாய்ப்பு. தவற விடாதவர்கள் பாக்யவான்கள்!