அபிராமி ராமநாதன் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது. பிரதான வேடத்தில் நாசர் நடிக்கிறார்.
கலாபவன் மணி பஞ்சாமிர்தத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார், கால்ஷீட் தேதிகள் ஒத்துவராததால் தற்போது அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் படத்தின் இயக்குனர் ராஜு ஈஸ்வரனே நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்க அதிக காட்சிகள் உள்ளன. குழந்தைகளை குறிவைத்து எடுப்பதால் இரட்டை அர்த்த வசனம், வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இன்றி படத்தை உருவாக்குகின்றனர்.
பிரதான வேடமொன்றில் ஜெயராம் நடிக்கிறார்.