இது கல்யாண காலம். கோபிகாவை தொடர்ந்து கல்யாணத்திற்கு தயாராகி வருகிறார் காவ்யா மாதவன்.
என்மன வானில், காசி படங்களின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் காவ்யா மாதவன். இவர் கடைசியாக தமிழில் நடித்த படம், சாது மிரண்டா.
வருடா வருடம் ஓணம் வருகிறதோ இல்லையோ காவ்யாவின் கல்யாணம் பத்திரிக்கையில் வலம் வரும். அப்போதெல்லாம் காவ்யா மாதவனிடமிருந்து விரிவான மறுப்பும் தவறாமல் இடம்பெறும்.
இந்தமுறை காவ்யாவே மீடியாவை அழைத்து, இந்த வருடத்திற்குள் எனக்கு திருமணம் என அறிவித்துள்ளார். நல்ல மணமகன் வேண்டி மாங்கல்ய பூஜையும் நடத்தியுள்ளார் இவர்.
சரி, மணமகன்?