மாளவிகாவின் செக்ஸ் டார்ச்சர் புகாரால் பாப்புலரான கார்த்தீகை படத்தின் பாடல் காட்சி ஹைதராபாத்தில் படமானது. மாளவிகாவுக்குப் பதில் விக்ரமாதித்யாவுடன் ஆடியவர் அமோகா, இந்தியில் நிஷா கோத்தாரி.
மாகி மாகி மாகிரே
உன்னால் பாத்ததும்
என் இதயம் துடிக்குதே
என்ற அந்தப் பாடலுக்கு முப்பது லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். மாளவிகா மீது வழக்கு தொடருவோம், நஷ்டஈடு கேட்போம் என குரல் கொடுத்த இயக்குனர் வீராவும் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலும் கப்சிப். மாளவிகா நடித்த பகுதிகளையும் அப்படியே படத்தில் வைத்திருக்கிறார்கள்.
மாளவிகா, அமோகா... இந்த இருவரால் உங்க முக்கியத்துவம் குறைந்து விடுமே என்று கார்த்தீகையின் இன்னொரு நாயகி சமிக் ஷாவிடம் கேட்டால், நான் படத்தில் வில்லியாக வருகிறேன். அதனால் என்னுடைய போர்ஷனில் கைவைக்க முடியாது என்கிறார் கூலாக.
தில்லான வில்லி!